உங்களை அன்புடன் வரவேற்கிறது லுஃப்தான்ஸா- நீங்கள் நினைப்பதை விட அதிக இந்தியப் பண்புகளைக் கொண்ட ஒரு விமான நிறுவனம்! உள்நாட்டிற்குள்ளும் , வெளிநாடுகளுக்கும் பறக்கும் எல்லா லுஃப்தான்ஸா விமானங்களிலும் தன்னிகரற்ற இந்தியப் பண்பும், உணர்வும் மிகவும் வெளிப்படையாகத் தெரிவதைக் காண்பீர்கள். இந்தியாவில் அரைநூற்றாண்டு காலச் சேவைக்குப் பின்னர், நமது செயல்திறன், நம்பகம், புத்தாக்கம், மற்றும் தொழில்நுட்ப உன்னதம் என்னும் பாரம்பரியத்துடன் லுஃப்தான்ஸா பின்னிப்பிணைந்து விட்டது.

விமானப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் - எமது விருந்தோம்பலாகட்டும், விமானங்களில் பரிமாறப்படும் உணவுகளில் ஆகட்டும், கேளிக்கையிலாகட்டும் இந்தியப் பண்பு மிளிர்வதை நீங்கள் காண்பீர்கள். எங்களுடைய நீண்டநெடும் கூட்டாளிமுறை உறவினால் நாங்கள் இந்தியக் கலாச்சாரத்தை நன்கு புரிந்துகொண்டு, உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சேவைகளை மாற்றி வழங்குகிறோம். இந்த இடைவிடாத முயற்சியினால், உங்களுடைய நம்பிக்கையை நாங்கள் வென்று, இந்தியாவில் பறக்கும் நெ. 1 ஐரோப்பிய ஏர்லைனர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டோம்.

View More

ஆன்போர்ட்: வானிலே பறக்கும் இந்தியப் பண்பு

Onboard

கேளிக்கை, உணவு, பணியாளர்கள் என்று எதுவானாலும், இந்தியாவில் இருந்து புறப்படும் லுஃப்தான்ஸா விமானங்களில் பயண அனுபவம் முழுவதுமே உங்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

பயணம் தொடங்கியதில் இருந்து இலக்கு வரையிலான பயணம் தொடங்கிய மறு நிமிடமே, இந்தியாவில் இருந்து செல்லும் லுஃப்தான்ஸா பயணிகள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றதாக மாற்றப்பட்ட ஓர் உலகிற்குள் நுழைந்து விடுகின்றனர். வாசிப்பதற்கு வகைவகையான இந்தியச் செய்தி ஏடுகள், பத்திரிக்கைகள் தரப்படுகின்றன. பிரத்யேகமான ரேடியோ சேனல்களில் இந்தி திரைப்பட இசையைக் கேட்டு மகிழலாம்.

பிரபலமான பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து பரவசமடையலாம். இந்திய உணவு வகைகளை உண்டு களிக்கலாம். சுடச்சுட இந்திய சாயாவும் கூட கிடைக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து நடுவானிலே உங்களுக்கு ஓர் இந்திய உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. செக் இன் நடந்ததுமே உங்களை அனுபவம் மிக்க இந்திய தரைதளப் பணியாளர்கள் வாழ்த்தி வரவேற்புக் கூறி, பணிவிடை செய்கிறார்கள். விமானத்துக்கு உள்ளே இந்தியப் பணியாளர்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்கின்றனர். இந்த விமானப் பயண அனுபவம் முழுவதுமே வீட்டுக்கு அப்பாலும் வீட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

View More

Inflight menu image

விமானத்துக்குள் பரிமாறப்படும் உணவுவகைகள்: நாட்டு ருசி, நாட்டு மசாலாக்கள்.

நீங்கள் எந்த வகுப்பில் பயணம் செய்தாலும், இந்தியாவில் இருந்து புறப்படும் ஒரு லுஃப்தான்ஸா விமானத்தில் எப்போதுமே இந்திய உணவு வகைகளை உண்டு மகிழலாம். நீங்கள் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும்போது ஆசியன் வெஜிட்டேரியன் என்று குறிப்பிடுங்கள் போதும். உங்களுடைய வித்தியாசமான இந்திய ருசிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பாரம்பரிய இந்திய மசாலாக்களைக் கொண்டு சமைக்கப்பட்ட இந்திய உணவுகளை விமானத்துக்கு உள்ளே நீங்கள் வயிறார உண்ணலாம்.

எங்களுடைய ஃபர்ஸ்ட் கிளாஸ் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளைப் பரிவுடன் கவனிப்பதற்காக, பிரபல சமையற்கலை நிபுணர் குனால் கபூர், புகழ்பெற்ற சமையல் வல்லுநர் சுரேந்திர மோகனுடன் சேர்ந்து இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எல்லா லுஃப்தான்ஸா விமானங்களிலும் உள்ளே தலைசிறந்த இந்திய உணவு வகைகளை சமைத்து வழங்குகின்றனர். உண்மையில், மிகச்சிறந்த இந்திய உணவுவகையைத் தெரிந்தெடுப்பதற்காக லுஃப்தான்ஸா இந்தியா முழுவதிலும் சமையல் போட்டியை நடத்தியது. வெற்றிபெற்றவர் சமைத்துக் காட்டிய சமையல் குறிப்பு லுஃப்தான்ஸா விமானத்துக்குள் ஃபர்ஸ்ட் மற்றும் பிஸினஸ் கிளாஸ் பயணிகளுக்கு பரிமாறப்படுகிறது!

View More

Inflight entertainment image

விமானத்துக்குள் கேளிக்கை; எனக்காக பாலிவுட்

புத்தம் புதிய பாலிவுட் படங்களை பார்க்கலாம். அல்லது நினைவில் இருந்து நீங்காத பழம்பெரும் இன்னிசைப் பாடல்களைக் கேட்கலாம். லுஃப்தான்ஸா விமானத்துக்குள் இருக்கும் ரிதம் ஆஃப் இந்தியா என்னும் இந்திய மியூசிக் சேனலில் உங்களுக்கு விருப்பமான இசையக் கேட்டு ஆனந்தியுங்கள். ஹெட்போன் மாட்டி , ஓய்வாக அமர்ந்து, நீங்கள் நினைத்ததை விட வித்தியாசமான இந்திய உணர்வைத் தரும் பயண அனுபவத்தை அடைந்திட ஆயத்தமாகுங்கள்! தற்போதைய செய்திகளை உங்களுக்குச் சுடச்சுட வழங்கிட இந்திய செய்தி ஏடுகள் அல்லது பத்திரிக்கைகள் கூட உங்களுக்குக் கிடைக்கும்! மேகக் கூட்டங்களுக்கு மேலே நீங்கள் பறக்கும்போது, நீங்கள் பற்பல பாலிவுட் திரைப்படங்கள் அல்லது இந்திய டிவி நிகழ்ச்சிகள் அடங்கிய முடிவற்ற விமான கேளிக்கை நிகழ்ச்சிகளில் இருந்து தெரிவுசெய்து, மகிழ்ச்சி அடையலாம். நீங்கள் லுஃப்தான்ஸா விமானத்தில் பறக்கும் நேரம்தான், ஓய்வாகச் சரிந்து அமர்ந்து, நடுவானில் நம்ம ஊரு கேளிக்கைகளை அனுபவிக்கும் நேரமாகும்.


உங்களுக்குத் தெரியுமா?

30 ஆண்டுகளுக்கு முன்பே 1987 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்லும் லுஃப்தான்ஸா விமானங்களில் இந்திய இசை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.

View More

Indian crew

இந்தியப் பணியாளர்கள்: வீட்டில் இருப்பது போன்ற ஓர் உணர்வு

இந்திய விருந்தோம்பல் உலகப் புகழ்பெற்றது. எனவேதான், லுஃப்தான்ஸா கிட்டத்தட்ட 200 இந்திய விமானப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. எப்போதும் உதவிடக் காத்திருக்கும் எமது உயரிய பயிற்சி பெற்ற தரைப்பணியாளர்களின் உதவியுடன் விமான நிலையத்தில் நீங்கள் செக்-இன் செய்ததுமே, விமானத்துக்கு உள்ளே இருக்கும் எமது இந்தியப் பணியாளர்கள் உங்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுவார்கள்.

ஃபிராங்க் ப்ர்ட் போன்ற எங்களுடைய மையங்களுக்கு நீங்கள் வந்து இறங்கியதுமே உங்களுக்கு லுஃப்தான்ஸா வரவேற்புச் சேவை உங்களை இந்தி, தமிழ், பஞ்சாபி ஆகிய மொழிகளில் வாழ்த்துக் கூறி வரவேற்பார்கள். ஜெர்மானிய மொழியோ, ஆங்கிலமோ பேசத் தெரியாத விருந்தினர்களுக்கு உதவும் நோக்குடன் வழங்கப்படும் இந்த சேவைகள், கடப்புக்காக நீங்கள் விமானநிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அல்லது வந்து இறங்கியதும் திண்டாடாமல் இருக்க உதவுகின்றன.

View More

லுஃப்தான்ஸா & இந்தியா

Lufthansa India

முதலாவது லுஃப்தான்ஸா விமானம் 1934 ஆம் ஆண்டில் இந்திய மண்ணைத் தொட்டது. அன்று ஒரு ஜே யு 52 விமானம் அழகான ஜோத்பூர் நகரில் வந்து இறங்கியது. ஆனால் 1959 நவம்பரில்தான் லுஃப்தான்ஸா தனது முதலாவது வர்த்தக சேவையை இந்தியாவில் தொடங்கி, கொல்கத்தாவுக்கு லாக்ஹீட் சூப்பர் கான்ஸ்ட்டலேஷன் விமானத்தை அனுப்பியது. அன்றில் இருந்து இந்தியாவுடன் லுஃப்தான்ஸாவின் கூட்டாளியுறவு ஆண்டுக்கு ஆண்டு வலுவடைந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்துபோகும் லுஃப்தான்ஸா விமானங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் 46 ஆக உயர்ந்து விட்டது. அவை ஃபிராங்க்பர்ட் மற்றும் மியூனிக்கில் இருந்து -தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, புணே ஆகிய 5 நுழைவாயில்களுக்கு வருகின்றன. லுஃப்தான்ஸா தனது குழும நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து, உலகின் 4 மையங்களில் இருந்து இந்தியாவின் 5 நுழைவாயில்களுக்கு 66 வாராந்திர சர்வீஸ்களை விடுகின்றன. இதன் மூலம், இந்தியாவில் நெ.1 ஐரோப்பிய ஏர்லைன் குழுமமாக ஆகிவிட்டது.

உங்களுக்குத் தெரியுமா?

வானத்தின் அரசி” எனப்படும் லுஃப்தான்ஸா போயிங் 747-8 விமானத்தை வரவேற்ற முதலாவது ஆசிய நாடு மற்றும் உலகின் இரண்டாவது நாடு இந்தியா.

View More

லுஃப்தான்ஸா & இந்தியா

Lufthansa history

கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக, லுஃப்தான்ஸா நம்பிக்கை மற்றும் கடமைப்பற்று என்ற அடிப்படையில் இடைவிடாது கூட்டாளி உறவை வளர்த்து வருகிறது. 1934-இல் லுஃப்தான்ஸாவின் ஜங்க்கர்ஸ் ஜே யு 52 விமானம் ராஜஸ்தானின் பொன்மணற்பரப்பில் உள்ள ஜோத்பூரில் தரையைத் தொட்டு பயணத்தைத் தொடக்கியது. எனினும், இது முறைப்படியான உறவாக வளர்ந்தது 1959 ஆம் ஆண்டில்தான். அப்போது ஒரு லுஃப்தான்ஸா லாக்ஹீட் எல் 1049 ஜி சூப்பர் கான்ஸ்டலேஷன் விமானம் கல்கத்தாவில் ( இன்றைய கொல்கத்தா) தரை இறங்கி , இந்தியாவுக்கு லுஃப்தான்ஸாவின் ஷெட்யூல்டு விமானப் பறப்புக்களைத் துவக்கி வைத்தது. இந்திய விமானப் போக்குவரத்துத் தொழிலின் ஏற்ற இறக்கங்களுடன் கூடவே லுஃப்தான்ஸா தொடர்ந்து இருந்து வருகிறது.

விமானப் பறப்புக்கள் மற்றும் இலக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அப்பாலும், லுஃப்தான்ஸா தனது சேவைகளை இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றதாக மாற்றியமைத்து, இந்தக் கூட்டாளி உறவை ஆழப்படுத்தியுள்ளது. இந்தப் பாதையில் முன்னேற்ற மைல்கற்களாக இந்திய கேபின் பணியாளர்கள், இந்திய இசை, பாலிவுட் மூவிகள் மற்றும் பற்பல இந்திய உணவு வகைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

1934

இந்தியாவிற்கு லுஃப்தான்ஸாவின் முதலாவது விமானப் பறப்பு தொடங்கி ஜோத்பூரில் தரை இறங்கியது.

1959

லுஃப்தான்ஸா கொல்கத்தாவுக்கு தனது முதலாவது ஷெட்யூல்டு போக்குவரத்தைத் தொடங்கியது.

1987

லுஃப்தான்ஸாவின் உள்விமானக் கேளிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய இசை அறிமுகப்படுத்தப்பட்டது.

1996

இந்திய வழித்தடங்களில் இந்திய கேபின் பணியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

2004

ஜெர்மனியில் மியூனிக் லுஃப்தான்ஸாவின் இரண்டாவது இலக்காக ஆனது. புதுதில்லியில் இருந்து ஃபிராங்க்பர்ட்டுக்குச் செல்லும் விமானங்களுடன் இவையும் இயக்கப்பட்டன.

2009

சி என் பி சி அவாஸ் டிராவல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் லுஃப்தான்ஸா “இந்தியாவில் மிகச்சிறந்த சர்வதேச ஏர்லைனாக’’ வாக்களித்து தெரிவு செய்யப்பட்டது.

2011

அவுட்லுக் டிராவலர் “பேவரிட் இண்ட்டர் நேஷனல் ஏர்லைன்’’ விருதை லுஃப்தான்ஸாவுக்கு வழங்கியது.

2012

புதுதில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமானநிலையத்தில் லுஃப்தான்ஸா லவுஞ்ச் திறக்கப்பட்டது.

2012

லுஃப்தான்ஸா , தில்லி- ஃபிராங்க்பர்ட் மற்றும் பெங்களூரு- ஃபிராங்க்பர்ட் வழித்தடங்களில் புத்தம் புதிய போயிங் 747-8 விமானங்களை அறிமுகப்படுத்தி, புது விமானத்தை வரவேற்ற முதலாவது ஆசிய நாடாக இந்தியாவை ஆக்கியது. அதில் புதிய ஃபுல் ஃபிளாட் பிஸினஸ் கிளாஸ் சீட்டுகள் இருந்தன.

2014

டைரக்ட் மார்க்கெட்டிங் இண்ட்டர்நேஷனல் எக்கோ விருது நிகழ்ச்சியில் லுஃப்தான்ஸா இந்தியாவின் முயற்சிகளுக்காக 4 தங்கம், 4 வௌ்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. லுஃப்தான்ஸா, தொடர்ந்து 3 தடவைகள் GMR-IGI அவார்ட் நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் சிறந்த ஏர்லைன் - ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா விருதை வென்றது.

50 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை & கடமைப்பற்று

Testimonial banner

இந்தியாவை நோக்கிய எமது கடமைப்பற்றும், எமது சேவைகளை ԅԆஇந்தியமயமாக்கும் முயற்சிகளும் முன்னேற்றமடைந்து, எமது வாடிக்கையாளர்கள், எமது கூட்டாளிகள் மற்றும் இந்தியப் பயணிகளின் இடைவிடாத பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு சர்வதேச பயணத் தொழில்துறையினரால் மட்டுமல்ல, குறிப்பாக இந்திய பயணத்துறையிலும் எங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இவற்றில் சில; சி என் பி சி அவாஸ் டிராவல் அவார்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த சர்வதேச ஏர்லைன் விருது, அவுட்லுக் டிராவலர் அமைப்பினால் மிக விருப்பமான சர்வதேச ஏர்லைன் விருது, மற்றும் 1வது வருடாந்திர ஜி எம் ஆர்- ஐஜிஐ ஏர்போர்ட் விருதுகளில் ஏர்லைன் ஆஃப் தி இயர்-ஐரோப்பா விருது ஆகியன அடங்கும். இவை எல்லாம் சேர்ந்து எங்களை இந்தியாவின் நெ.1 ஐரோப்பிய ஏர்லைனாக ஆக்கிவிட்டன. ஆனால் இந்தப் பாராட்டுகளோடு, எங்களுடைய வாடிக்கையாளர்களின் புகழுரைகள்தான் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கம் தருகின்றன. உங்களுக்கு மேகங்களுக்கு மேலே ஒரு வீடமைத்துக் கொடுக்கும் எங்கள் முயற்சிகளுக்கு உத்வேகம் தருகின்றன!

View More

இந்தியாவில் லுப்தான்ஸாவின் ஈடுபாட்டைப் பற்றி இன்னும் அதிகமாக கண்டு கொள்ளுங்கள்

தீபாவளித் திருநாளை குதூகலமாக கொண்டாடுவது தொடங்கி அற்புதமான இந்திய சமையல் கலையை உலகுக்கு படம் பிடித்து காட்டுவது, தொழில்முனைவர்களை வளர்த்து அவர்கள் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை மற்றவர்கள் அறியச் செய்வது என லுப்தான்ஸாவின் அண்மைய விளம்பரங்கள் நிஜமான இந்திய உணர்வை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் லுப்தான்ஸா நிறுவனத்தால் முதன்மையாக தொடங்கப்பட்டு இங்கே இந்தியாவிலும் லுப்தான்ஸா ஏர்லைன்ஸின் உலகெங்கும் பரவியிருக்கும் விசாலமான நெட்வொர்க் மூலமாகவும் செயல் வடிவம் பெற்றிருக்கும் இந்த விளம்பர கேம்பெய்ன்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் உலகெங்கும் வசிக்கும் லட்சோபலட்சம் இந்தியர்களின் கவனத்தைக் கவர்ந்து இதில் அவர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வைத்துள்ளது. இங்கே நாங்கள் ஒருசில உதாரணங்களை உங்களுக்காக வழங்குகிறோம்.

அவை லுப்தைன்ஸா ஏன் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிக அளவில் தனது இந்தியத் தன்மையை வெளிப்படுத்துகிறது என ரத்தின சுருக்கமாக விளக்கிவிடும்.

View More