அம்மாவுக்குத் தெரியும் எது மிகச் சிறந்தது என்று. எனவேதான் அம்மாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எங்கள் விமானப் பறப்பில் நீங்கள் நினைப்பதை விட அதிக இந்திய உணர்வு ஏற்பட பாடுபடுகிறோம். வீட்டிற்கு வளியேயும், வீட்டில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறோம்.

உபசரிப்பு

உபசரிப்பு

இதயம் கனிந்த ‘ நமஸ்தே’ யுடன் தொடங்குகிறது ஒரு கச்சிதமான பயணம்.

இந்தியப் பெண் பயணியை ஒரு விமானப் பணிப்பெண் ‘நமஸ்தே’ என்று கரம் குவித்து வரவேற்கிறாள்.
இந்தியப் பெண் பயணியை ஒரு விமானப் பணிப்பெண் ‘நமஸ்தே’ என்று கரம் குவித்து வரவேற்கிறாள்.

இந்தியர்களைவிட சிறப்பான உபசரிப்பாளர் வேறு யாருமில்லை. எனவேதான், எங்களுடைய 200 இந்திய விமானப் பணியாளர்கள் இந்தியிலும், சொந்த மொழிகளிலும் பேசி வரவேற்று உபசரிக்கின்றனர்.

உணவு & பானங்கள்

உணவு & பானங்கள்

உண்மையாகவே ஓர் இந்திய உணவுதான் வீட்டில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை உண்டாக்குகிறது.

இந்தியப் பெண் டிவிசி-யில் இருந்து ஆங்கில கோச்சுக்கு அருகில் உட்கார்கிறாள். இருவரும் தங்களுக்குப் பரிமாறப்படும் இந்திய கறியை விரும்பி
ஒரு டிரே டேபிளில் மெனுவை பார்க்கிறோம்: சுவையான இந்திய கறி, ஒரு பானம் மற்றும் தொடுகறி பண்டங்கள்.

உங்கள் வீட்டில் இருப்பதைப் போல சௌகரியமாக ஸீட்டில் அமருங்கள்: சூடான ஒரு கப் டீயும், சுவையான இந்திய உணவும் அருந்துங்கள்- அம்மா போன்ற ஒரு நிபுணர் கூட அதை அனுபவித்து உண்பார்கள்.

ஒரு டிரே டேபிளில் மெனுவை பார்க்கிறோம்: சுவையான இந்திய கறி, ஒரு பானம் மற்றும் தொடுகறி பண்டங்கள்.
பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

நீங்கள் என்ட்டர்டெயின்மென்ட் ஃபன்னில் இருக்கும்போது நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது.

இந்தியப் பெண் ஒரு ஹெட்செட்டை அணிந்தபடி விமானத்திற்குள் வரும் என்ட்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.
விமானத்தில் நீங்கள் இந்தியில் பார்த்து, கேட்டு, படித்து மகிழ வேண்டிய மூவிகள், செய்திகள் மற்றும் மியூசிக் பற்றிய ஓர் அட்டவணை

நல்ல முறையில் உபசரிப்பவர்கள் எப்போதுமே தங்களது விருந்தினர்களுக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். நாங்கள் வழங்கும் பாலிவுட் ஹிட் படங்கள், சேனல்கள் மற்றும் இந்தி செய்திப் பத்திரிக்கைகள் இருப்பதால் உண்மையிலேயே உங்கள் நேரம் பறந்து விடும்.

என்ட்டர்டெயின்மென்ட் ஸ்க்ரீனில் ஒரு பாலிவுட் படக்காட்சி தெரிகிறது.
விமானத்தில் நீங்கள் இந்தியில் பார்த்து, கேட்டு, படித்து மகிழ வேண்டிய மூவிகள், செய்திகள் மற்றும் மியூசிக் பற்றிய ஓர் அட்டவணை
புக்கிங்

புக்கிங்

அம்மா எங்களுக்கு ஒப்புதல் தந்துவிட்டாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உலகைச் சுற்றிப்பார்க்க ஒரு டிக்கெட் வாங்குங்கள். நாங்கள் எந்த அளவுக்கு இந்தியர்களாக இருக்கிறோம் என்பதை நீங்களே காணுங்கள்.

வரலாறு

வரலாறு

அம்மா அங்கீகரித்த பார்ட்னர்ஷிப்

1934 ஆம் ஆண்டு மற்றும் ஜங்க்கர்ஸ் Ju53 விமானம்.

‘ஆன்ட்டி ஜு’ இந்தியாவில் தரை இறங்கியது.

இந்தியாவில் முதன்முதலாக தரையிறங்கிய லுஃப்தான்ஸா விமானம் புகழ்பெற்ற ஜங்க்கர்ஸ் ஜு 52 ஆகும். அந்த மகத்தான ஆகாய இளவரசி 1934 செப்டம்பரில் எகிப்தில் இருந்து ஷாங்கை செல்லும் வழியில் ஜோத்பூரில் தரை இறங்கியது.

1959 ஆம் ஆண்டு மற்றும் சூப்பர் கோனி விமானம்.

ஹலோ இந்தியா!

லுஃப்தான்ஸா 1959-இல் இந்தியாவுக்கு தனது அட்டவணை விமானப் பறப்பு சேவையைத் தொடங்கியது. அப்போது ‘சூப்பர் கோனி’ என்ற லாக்ஹீட் சூப்பர் கான்ஸ்டெலேஷன் விமானம் வாரத்துக்கு இரண்டு தடவை ஃப்ராங்க்பர்ட்டில் இருந்து கொல்கத்தாவுக்கு (அன்றைய கல்கத்தா) கெய்ரோ, குவைத், கராச்சி வழியாக பறந்தது.

1987 ஆம் ஆண்டு மற்றும் ஒரு பிளேனில் ஒருவர் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்

உங்கள் செவிகளுக்கு இசை

லுஃப்தான்ஸா விமானங்களில் உள்ளே என்ட்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளுக்காக இந்திய இசை அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் வாசித்து மகிழ்வதற்காக இந்தியாவுக்கு வரும் மற்றும் அதே போல இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எல்லா லுஃப்தான்ஸா விமானங்களிலும் இந்தியச் செய்திப் பத்திரிக்கைகள் கிடைக்கின்றன.

1996 ஆம் ஆண்டு ஒரு இந்திய விமானப் பணியாளர்

அன்பான இந்திய உபசரிப்பு

இந்திய வழித்தடங்களில் பறக்கும் லுஃப்தான்ஸா விமானங்களில் அன்பான இந்திய உபசரிப்புக்கு மெருகூட்டும் வகையில் இந்திய கேபின் பணியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு இந்தியத் தொடுகறிகளுடன் இந்திய உணவு

லீலா தரும் சுவை

லீலா குரூப் ஆஃப் ஹோட்டல்களுடன் செய்துகொண்ட சமையல் ஒப்பந்தத்தினால் லுஃப்தான்ஸா விமானங்களில் பரிமாறப்படும் உணவுகளில் பாரம்பரிய இந்தியச் சமையல் திறன் சேர்க்கப்பட்டது. இது மேன்மேலும் வளர்ச்சி அடைந்து, குனால் கபூர் மற்றும் வினோத் சைனி என்னும் சமையல் கலை வல்லுநர்களின் சேவை கிடைத்துள்ளது.

2010 ஆம் ஆண்டு மேகங்களுக்கு மேலே ஒரு லுஃப்தான்ஸா விமானம். கீழே ஃபேஸ்புக் போன்ற பெருவிரல்கள்

ஃபேஸ்புக் மூலம் இணைப்பு

லுஃப்தான்ஸாவின் சிறப்பு ‘இந்தியா’ ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு, இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மேகங்களுக்கு மேலே போயிங் B747-8 விமானம்

ஆகாய ராணியின் வருகை

புத்தம் புதிய ‘ஆகாய ராணி’ போயிங் B 747 -8 தில்லி-பெங்களூரு வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் இந்த விமானத்தின் இரண்டாவது இலக்காக தில்லி ஆனது. அதன்பிறகு விரைவிலேயே பெங்களூருவும் ஆகிவிட்டது.

2013 ஆம் ஆண்டு வெற்றிக்கான ஓடுபாதை நிலை

ஆகாயங்களுக்கு அப்பால்

ரன்வே டு சக்ஸஸ் என்னும் பிரத்யேகமான ஒரு டிவி நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள வளரும் தொழில் முயற்சியாளர்களுக்காக தி இண்டஸ் எண்ட்டர்பிரனர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கப்பட்டது. இப்போது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, நாடெங்கும் வழிகாட்டு முகாம்களை ஏற்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான மேடையாக மாறிவிட்டது.

2014 ஆம் ஆண்டு மேகங்களுக்கு மேலே A380.

இந்தியாவின் சேவையில் கிரீன் ஜெயன்ட்

லுஃப்தான்ஸா A 380 என்னும் உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக விமானம் தில்லிக்கும், ஃபிராங்க்பர்ட்டுக்கும் இடையே தனது சேவையைத் தொடங்கியது.

2017 ஆம் ஆண்டு மேகங்களுக்கு மேலே A350

தலைநகருக்கு வந்த A 350

உலகிலேயே மிகவும் மேம்பட்ட, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான லுஃப்தான்ஸாவின A 350 விமானம் உலகுதழுவிய தனது இலக்காக தில்லியைத் தேர்ந்தெடுத்தது. இப்போது தினமும் தில்லிக்கும் மியூனிக்கிற்கும் இடையே இது பறந்து கொண்டிருக்கிறது.

1934

1959

1987

1996

2009

2010

2012

2013

2014

2017